இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உயிர்த்தெழும் நினைவுகள்

படம்
Audio File :  Uyirthezhum Ninaivugal ருசிக்கும் உணவோ  ரசிக்கும் இயற்கையோ  உன்னோடு இருந்தால்தான்  முழுமையாகிறது !! எங்கேனும் சென்றுவர  தாமதமானால்  காரணம் தெரியாமல்  அலைபாய்கிறது !! உலகத்தின் அத்துணை  சிறந்தவற்றையும்  உன் முன் கிடத்தி  திகைப்பில் ஆழ்த்தவே  விரும்புகிறது !! உன் செம்பொன்  வதனம் சற்றே  கூம்பினாலும்  என்னவாயிற்றோவென  பதறுகிறது !! உன் விருப்பங்கள்  கனவுகள் ஆசைகள்  யாவும் விரைவில்  நிறைவேற  இறைவனிடம்  இறைஞ்சுகிறது !! யாதுமாகி  என்னுள் நிறைந்து  உயிர்த்தெழ வைக்கிறாய்  பலநேரங்களில் !! இப்படி சதா உன்னைச்  சுற்றி வரும் நினைவுகளை  சற்றே தள்ளி வைத்து  சில நேரங்களில்  என்னைப்பற்றியும்  சிந்தித்துக் கொள்கிறேன்  தொடர்பு எல்லைக்கு  அப்பால் போ என்  அன்பானவனே !!