இடுகைகள்

சங்கரம்மா (சிறுகதை)

                 சங்கரம்மா                                           எங்க அம்மா சங்கரம்மாவும்,  சீனியம்மாவும் பருத்திக் காட்டுக்குள்ள பருத்தி திருடுறதுல இருந்து, கரிசக்காட்டுக்குக் களை எடுக்க போறது வரை எல்லாத்துலயும் சேக்காளிக தான். சீனியம்மா வீட்டுகாரரும், எங்க அய்யாவும் பக்கத்து பக்கத்து அச்சாவீஸ்ல வாட்ச்மேன் வேலை பாத்தாக. அந்தந்த அச்சாவீசுக்குள்ளயே தங்குறதுக்குச் சின்னதா ஒரு வீடு போட்டு கொடுத்திருந்தாக.  இரண்டு அச்சாவீசுக்கு இடையில கம்பிவேலி இருக்கும். அந்த வேலில ஒரு ஆள் உள்ள நுழைஞ்சு போற அளவுக்கு இருக்குற கம்பிய வெட்டி ஓட்டை போட்டு ரெண்டு வீட்டு ஆளுகளும் அங்குட்டும் இங்குட்டும் போயிட்டு போயிட்டு  வந்துகிடுவோம்.            சீனியம்மா காட்டு வேலைக்கு போயிட்டு வந்தா நேரா எங்க வீட்டுக்கு தான் வரும்.  எங்க வீட்டை ஒட்டி எங்கய்யா வச்ச வேப்பமரம் ஒன்னு நல்லா வளர்ந்து பெருசா இருக்கும்.  அதோட ...

விஞ்ஞானத்தின் விஸ்வரூபம்

 ஒரு சின்ன குழந்தையை மூன்று நாய்ங்க சேர்ந்து பொம்மையை வச்சி விளையாடுற மாதிரி கடிச்சிக் குதறுற வீடியோ,           தலைமையாசிரியர் ஆறாவது படிக்கிற குழந்தைகிட்ட தப்பா நடந்துக்கிறாருன்ற செய்தி         கல்லுரி தமிழாசிரியர் தன் மாணவி கிட்ட பேசுற ஆடியோ         மெட்ரோ பாலம் இடிஞ்சி விழுந்து ஐடி ஊழியர் பலின்னு வீடியோ     செல்ஃபி எடுக்குறோம்ன்னு மக்கள் பண்ற அலும்புகள்          நெஞ்சைப் பதற வைக்கும் விதவிதமான வாகன விபத்துகள்,        இதெல்லாம் பத்தாதுன்னு Ai மூலமா உருவாக்கப்படுற வீடியோக்கள்.       இன்னும் பல பல..........        இவற்றை ஒருமுறை தற்செயலாக பார்த்துவிட்டால் மறுபடியும் மறுபடியும் வந்து அதுவாகவே கொட்டுகிறது அமுதசுரபியாக         இதையெல்லாம் பாத்து நமக்கு ஹார்ட் அட்டாக் மட்டும் தான் வரல. ஆனா மனசு பதட்டமா இருக்கு. கொஞ்ச நேரம் மனசுக்குள்ள அதுவேதான் ஓடிட்டு இருக்கு.        ஆனா இதையெல்லாம் மிஞ்ச...

திருப்பாவை பாடல் - 2

 ஆண்டாளின் தோற்றம்:              ஆண்டாள் மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்த விஷ்ணுசித்தர் (இவர் பெரியாழ்வார் எனவும் அழைக்கப்படுகிறார்.) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாக துளசி செடியின் கீழ் கண்டெடுக்கப்பட்டுள்ளார். விஷ்ணுசித்தர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொடுப்பதை தன் கடமையாக கொண்டவர்.                             தனக்கென குடும்பம் எதுவுமில்லாத நிலையில் கண்டெடுத்த குழந்தை தனக்காக இறைவனால் வளர்க்கப்பட்ட குழந்தை என எண்ணி அக்குழந்தைக்கு கோதை நாச்சியார் எனப் பெயரிட்டு வளர்க்கலானார்.              ஆண்டாளின் தோற்றம் இவ்வாறே நிகழ்ந்தது. திருப்பாவை 2 ஆம் பாடல் ---------------------------------- வையத்து வாழ்வீர்காள் நாமும்நம்                                           பாவைக்கு செய்யும் கி...

திருப்பாவை பாடல் - !

 ஆண்டாளின் திருப்பாவை - 1 இன்று மார்கழி மாதம் முதல் நாள். மார்கழி என்றாலே நம் நினைவிற்கு வருவது வில்லிபுத்தூரை அரசாளும் ஆண்டாளும், அவர் எழுதிய திருப்பாவையும், அதிகாலைப்பனியும் வாயில் கோலங்களும்தான்.                மனதிற்கினிய ஆண்டாள் பற்றிய குறிப்புகளும், திருப்பாவைப்பாடல்களும் தினம் ஒன்றாக பொருள் விளக்கத்துடன் தரவேண்டும் என்பதே என்னுடைய ஆவல். திருப்பாவை பற்றி:             12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை.            இந்நூல் 30 பாடல்களால் ஆனது.            வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான  நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் 473 வது பாடலில் இருந்து 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவை பாடல்கள் ஆகும்.                 தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னியர் பாவை நோன...

மண் வாசம்

படம்
எதிர்பார்த்துக் காத்திருக்க யாருமே இல்லாதபோதும் ஏதோவொரு ஒரு  அங்கலாய்ப்பு  மழை பொழியும்போதெல்லாம் தவதாயப்படுகிறது மனம் சொந்த மண்ணின்  வாசனையை நுகர இன்றும் மழை பொழிகிறது                                  ஜெயா நவி                                 

கண்ணம்மா

படம்
 விழிகள் பார்க்கும்  பிம்பங்கள் எல்லாம்  உனதாகவே!! செவியில் கேட்கும் ஒலியிலெல்லாம்  உன்றன் குரலே !! கண்ணம்மாவிற்காக கவிபாடி பாரதி  கசிந்துருகினான் !! என் கண்ணின்  பாவையே ! உனக்காக நானும்  உருகுகிறேன்  கவிபாடி !! காணி நிலமும்  தென்னை மரங்களும் தென்றல் காற்றும் குயிலின் ஓசையும் கூட வேண்டாமெனக்கு !! உன் மனதிலும் மடியிலும் ஒர் இடமும் ! தலை கோதும் உன்றன்  ஒற்றைப் ஸ்பரிசமும் ! ஏய் புள்ள! என்று காதோடு பேசும் கொஞ்சல் மொழியும் ! போதுமானதுதான்  நான் உயிர்பித்திருக்க !! என்னவனே !!                                  ஜெயா நவி

சுமைதாங்கி

படம்
கையிலேந்திய பொழுது  பெரிதுவந்து ! தோளில் தூக்கி வைத்து  கொஞ்சி கூத்தாடி ! அவர்களுக்காகவே தன்  விருப்பு வெறுப்பு மறந்து ! ஏணியாய் இருந்து ஏற்றிவிட்ட  மக்கள் செல்வங்கள் கைவிட்டுவிட ! அலட்சியங்களும்  அவமானங்களும் துரத்த ! மிச்சமிருக்கும் சுயமரியாதையும் வைராக்கியமும் விழித்துக்கொள்ள  அன்று சுமைதாங்கியானவர் இன்று சுமைதூக்கியாய் ! சுருக்கங்கள் தோலில்தான் மனதில் அல்ல என  பாரம் சுமக்கும்  ஆன்மபலம்  நெஞ்சினில் ! வறுமையின் நிறம் சிகப்பு என்பது மிகச் சரியாவேதானோ !!                                       ஜெயா நவி