இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அடர்வன நாதங்கள்

படம்
 அடிமனதின் நாதங்களை  தட்டி எழுப்புகிறாய்  அடர்வனத்தில் இருந்து ! மனம் முகிழத்தான் செய்கிறது  கொஞ்சிப் பேசும் உன்றன் குரலோசையால் !! விடியும்வரை நீ பேசும்  பாப்லோ நெருடாவும்  கம்ப ராமாயணமும் கேட்டு  சற்று வியந்துதான் போகிறேன் !! தமிழாய் தமிழின் சுவையாய்  எனக்குள் இருந்து விடு எப்பொழுதும் !! தேங்கி கிடந்த நினைவுகள்  எல்லாம் உன்றன் வருகையால் என் எண்ணங்களில்  வரிகளாகிறது !! என் கவிவெளியெங்கும்  சூழ்ந்து தனிமை அகற்று !! தமிழ் ஒளி ஏற்று !!                         ஜெயா நவி