அடர்வன நாதங்கள்



 அடிமனதின் நாதங்களை 

தட்டி எழுப்புகிறாய் 

அடர்வனத்தில் இருந்து !


மனம் முகிழத்தான் செய்கிறது 

கொஞ்சிப் பேசும் உன்றன்

குரலோசையால் !!


விடியும்வரை நீ பேசும் 

பாப்லோ நெருடாவும் 

கம்ப ராமாயணமும் கேட்டு 

சற்று வியந்துதான் போகிறேன் !!


தமிழாய் தமிழின் சுவையாய் 

எனக்குள் இருந்து விடு

எப்பொழுதும் !!


தேங்கி கிடந்த நினைவுகள் 

எல்லாம் உன்றன் வருகையால்

என் எண்ணங்களில் 

வரிகளாகிறது !!


என் கவிவெளியெங்கும் 

சூழ்ந்து தனிமை அகற்று !!

தமிழ் ஒளி ஏற்று !!

                        ஜெயா நவி










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கரம்மா (சிறுகதை)

கண்ணம்மா