கண்ணம்மா

 விழிகள் பார்க்கும் 

பிம்பங்கள் எல்லாம் 


உனதாகவே!!


செவியில் கேட்கும்

ஒலியிலெல்லாம் 

உன்றன் குரலே !!


கண்ணம்மாவிற்காக

கவிபாடி பாரதி 

கசிந்துருகினான் !!


என் கண்ணின் 

பாவையே !

உனக்காக நானும் 

உருகுகிறேன் 

கவிபாடி !!


காணி நிலமும் 

தென்னை மரங்களும்

தென்றல் காற்றும்

குயிலின் ஓசையும்

கூட வேண்டாமெனக்கு !!


உன் மனதிலும் மடியிலும்

ஒர் இடமும் !

தலை கோதும் உன்றன் 

ஒற்றைப் ஸ்பரிசமும் !

ஏய் புள்ள! என்று

காதோடு பேசும்

கொஞ்சல் மொழியும் !

போதுமானதுதான் 

நான் உயிர்பித்திருக்க !!

என்னவனே !!

                                 ஜெயா நவி




















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கரம்மா (சிறுகதை)

அடர்வன நாதங்கள்