நளா குட்டி
உன் வனப்பு காட்டும் புன்முறுவலில் எந்தன் பொழுதும் இனிதாய் புலர்கிறதடா !! உன் வதன சந்திர பிம்பத்தால் என்னை உயிர்ப்பித்து உலாவ விடுகிறாயடா !! சொல்லில் அடங்கா ஏகாந்தம் உன் மென்பஞ்சு பாதங்களை கண்களில் ஒற்றும்போது !! பிறை நுதலின் நட்சத்திர ஒளியால் என் கண்களின் பாவையாகிறாய் உன் கன்னக்குழியின் சிரிப்பழகில் வீழ்ந்த என்னை உன் வெண்டை விரல் பிடித்து மீட்டுச் செல்லடா !! கடினமான தருணங்களைக்கூட இலகுவாக்கி காட்டுகிறாயடா உந்தன் அபிநயங்களால் !! பெருந்தவம் புரிந்தேனோ உன் கோவைப்பழ உதட்டு முத்தம் பெற்றிடவே !! என் முத்து பெற்றெடுத்த நல்முத்தே ! உன்னை வாரியணைத்தபடிதான் எந்தன் ஆவியும் அடங்குமடா !!