மயிற்பீலி நேசங்கள்
வார்த்தை
ஜாலமில்லாத
அன்பை
குழைத்து
வர்ணம்
தீட்டுகிறாய்
உள்ளத்தில்
!!
மயிற்பீலியை
விட
மென்மையாக
மனதை
வருடிச்
செல்கிறாய்
!!
தவறவிட்ட
அன்பின்
நேசங்களை
ஒட்டுமொத்தமாக
அள்ளித்தந்து
திகைப்பில்
ஆழ்த்துகிறாய்
!!
என்
ஒவ்வொரு
நொடியையும்
அழகாக்கி
மகிழ்ச்சியால்
நிரப்புகிறாய்
!!
ஆண்
வெட்கப்படுவது
அலாதியான
அழகுதான்
தெரிந்துகொண்டேன்
நீ
வெட்கப்படும்போது !!
எவ்வளவு
நேரம்
நீ
பேசினாலும்
இன்னும்
சற்று
நேரம்
பேசக்கூடாதா
என்றுதான்
மனம்
ஏங்கித்தொலைக்கிறது
பேசுவதற்கு
எதுவுமே
இல்லையென்றபோதும்
!!
கருத்துகள்
கருத்துரையிடுக