பொய் வர்ண முகங்கள்

ஆக்ரோஷ அலைகளின்

நடுவே தனியாகத்

தத்தளித்துப்

போராடி எதிர்நீச்சலிட்ட

கரை சேர்ந்தபின்

வருகின்றன

 

வேடிக்கை பார்த்த

வல்லூறுகளின்

கூட்டமொன்று

போராடிக் களைத்து

விட்டாய்  சற்றே

இளைப்பாறு என்

நிழலில் நான்

இருக்கிறேன்

உனக்கு  என்று

பொய் வர்ணம்

பூசிய முகங்களோடு  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கரம்மா (சிறுகதை)

கண்ணம்மா

அடர்வன நாதங்கள்