கண்ணாமூச்சி காதல்
உன் பேனாவில்
மையிட்டு எழுதாமல்அன்பை நிரப்பி
எழுதுகிறாயோ !
உன் எழுத்துகள் இப்படி
சுழலுகின்றன என்னுள் !!
பார்க்காமலே , அறியாமலே
உன்னிதயம் நெருங்க
ஏதேனும் வசியம்
செய்தாயா என்ன ?
மனம் கட்டுண்டு
கிடக்கிறது உன்னுள் !!
என் உலகம் மிகச்
சிறியதடா அதில்
ஏன் இவ்வளவு
பெரிய தாக்கத்தை
உருவாக்கிவிட்டுப்
போகிறாய் ?
என் இதயம்
தங்காதடா பெரும்
புயலின் பாரத்தை !1
உணர்வுகளைத் தூண்டி
விளையாடுவது
எந்தவிதத்திலடா சேர்த்தி
காமமில்லாத காதல்
செய்யவும் முடியுமடா
என் ரசனைக்காரா !!
பேசமாட்டேன் எனச்
சொல்லி கோபம்
கொண்ட நாழிகை
முதல் உன்னையே
சுற்றி வருகுதடா
இந்த கூறுகெட்ட மனது
ஆனாலும் பேசுவதற்கு
ஏதோ ஒன்று
தடுக்கிறது !!
பரவாயில்லை இதுவும்
அழகுதானடா
தூரத்திலிருந்தே
இப்படி பேசாமல்
பேசிக்கொள்வது !!
சிறிது விளையாடிதான்
பார்ப்போமே இந்தக்
கண்ணாமூச்சி
ஆட்டத்தையும் !!
கருத்துகள்
கருத்துரையிடுக