அர்த்தமில்லாத ஆசைகள்
சொக்கட்டான்
ஆட்டத்தில்
பாதியில்
எழுந்த
பானுமதியை
தடுத்த
கர்ணனின்
கைப்பட்டு முத்து
மேகலை
தெறிக்க
கண்ட
துரியோதனன்
முத்துக்களை
எனக்
கேட்டு
நட்பிற்கு
இலக்கணமாகிறான்
!!
பேரழகுடன்
ஜொலித்த
ஜனகரின்
மகளைக்
கவர்ந்து
வந்தாலும்
அவளின்
சம்மதமில்லாமல்
தீண்டக்
கூடாதென
நினைத்த
இராவணன்
ஆண்மையின்
இலக்கணமாகிறான்
!!
ஆனாலும்
துரியோதனின்
நாடாளும்
ஆசையும்
இராவணனின்
பெண்டாளும்
ஆசையும்
இரு பெரும்
போரின்
அடித்தளமாகி
களங்கத்தையும்
அழிவையுமே
தந்தது !!
அர்த்தமில்லாத
ஆசைகள்
அவமானத்தை
மட்டுமல்ல
அழிவையும்
தேடித் தந்து
வாழ்க்கையின்
பாதைகளை
மாற்றிவிடுகின்றன
!!
கருத்துகள்
கருத்துரையிடுக