காற்றில் மிதக்கும் கனவுகள்
காற்றில் மிதக்கும் கனவுகள்
-------------------------------------------------
நிறைவேற்ற முடியாதநிஜங்களின்
ஏக்கங்கள்
ஆழ்மனதில்
விரியும்போது
ஏற்படும்
ஏகாந்தம் !!
பேரன்பின்
வெளிப்பாடாய்,
அரிதாரப்
பூச்சாய்,
அச்சத்தின்
அணிகலனாய்,
ஏமாற்றத்தின்
உருவாய்,
உணர்ச்சிப்
பிழம்பாய் ,
இப்படி
ஆயிரமாயிரம்
வண்ணமயமான
கனவுகள் தினமும்
!!
பொய்யென்று
தெரிந்தும்
கனவொன்று கண்டால்
நன்றானால்
மகிழ்ந்து
தீதென்றால்
துடித்து
வாழ்வதென்பது
நிதர்சனம் !!
கனவுகள்
வந்தாலென்ன
அத்தனையிலும்
நீ வந்து நீங்கா
நினைவலைகளை
நெஞ்சில்
நிறைத்து
என் கனவுகளை
காற்றில்
மிதக்கவிடுகிறாய்
!!
கருத்துகள்
கருத்துரையிடுக