தன்மான உழவனின் நிதர்சனநிலை

                                                                                                                     
உழவன் கணக்கிட்டால் 
உழக்கு கூட  மிஞ்சாதென்பர் 
ஆனாலும் கணக்கிடாமல் 
ஒவ்வொரு முறையும் 
எழுந்து நின்றுவிடுவோமெனும் 
நம்பிக்கையில் வானம் பார்த்து 
உழவிட்டு, விதை விதைத்து 
களையெடுக்க ஆட்கள் 
பார்க்க அனைவரும் 
"அனைவருக்கும் வேலை "
திட்டத்தில் வேலைக்கு 
சென்றுவிட தானே
தனியே உழன்று 
செம்மையிட்டு கொண்டுவர 
பருவம் தப்பிய பருவத்தில் 
வருணபகவனின் திடீர் 
விஜயத்தால் பாழுமாகிறதே
பயிர்கள் அனைத்தும்  !!

வாங்கிய கடனுக்கு 
வட்டியும் கட்டமுடியாமல் 
நிலமகளை விட்டுச்செல்லவும் 
முடியாமல் "திரிசங்கு" 
நிலையாகிறதே தன்மான 
உழவனின் வாழ்வும் !!

மண்ணோடு பேசி , சிரித்து 
அழுது , உறவாடிய அவனின் 
ஜீவத்துடிப்பும் உழுபடை 
மண்ணோடு மண்ணாகவே 
ஐக்கியமாகிறதே !!

பட்டினிச்சாவைத் தடுக்க 
விவசாய வாரிசுகள் 
அயல்நாடு சென்று
பிழைக்கும்  நிலையானதே !!

கோரிக்கைகள் , போராட்டங்கள் 
எதுவும் வேலைக்காமல் 
பாதி தரிசாகவும் 
மீதி கான்க்ரீட் கட்டிடங்களாகவும் 
உருமாறி என்றோ ஒருநாள் 
விவசாயி என்றொரு
இனமே இல்லாமல் அழிந்து 
போகுமுன் 
விழித்து கொள்வோம் !! 
  
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கரம்மா (சிறுகதை)

கண்ணம்மா

அடர்வன நாதங்கள்