சுமைதாங்கி
கையிலேந்திய பொழுது
பெரிதுவந்து !
தோளில் தூக்கி வைத்து
கொஞ்சி கூத்தாடி !
அவர்களுக்காகவே தன்
விருப்பு வெறுப்பு மறந்து !
ஏணியாய் இருந்து
ஏற்றிவிட்ட மக்கள் செல்வங்கள்
கைவிட்டுவிட !
அலட்சியங்களும்
அவமானங்களும் துரத்த !
மிச்சமிருக்கும் சுயமரியாதையும்
வைராக்கியமும் விழித்துக்கொள்ள
அன்று சுமைதாங்கியானவர்
இன்று சுமைதூக்கியாய் !
சுருக்கங்கள் தோலில்தான்
மனதில் அல்ல என
பாரம் சுமக்கும்
ஆன்மபலம் நெஞ்சினில் !
வறுமையின் நிறம் சிகப்பு
என்பது மிகச் சரியாவேதானோ !!
ஜெயா நவி

கருத்துகள்
கருத்துரையிடுக