விஞ்ஞானத்தின் விஸ்வரூபம்

 ஒரு சின்ன குழந்தையை மூன்று நாய்ங்க சேர்ந்து பொம்மையை வச்சி விளையாடுற மாதிரி கடிச்சிக் குதறுற வீடியோ, 

         தலைமையாசிரியர் ஆறாவது படிக்கிற குழந்தைகிட்ட தப்பா நடந்துக்கிறாருன்ற செய்தி

        கல்லுரி தமிழாசிரியர் தன் மாணவி கிட்ட பேசுற ஆடியோ

        மெட்ரோ பாலம் இடிஞ்சி விழுந்து ஐடி ஊழியர் பலின்னு வீடியோ

    செல்ஃபி எடுக்குறோம்ன்னு மக்கள் பண்ற அலும்புகள் 

        நெஞ்சைப் பதற வைக்கும் விதவிதமான வாகன விபத்துகள், 

      இதெல்லாம் பத்தாதுன்னு Ai மூலமா உருவாக்கப்படுற வீடியோக்கள்.

      இன்னும் பல பல..........

       இவற்றை ஒருமுறை தற்செயலாக பார்த்துவிட்டால் மறுபடியும் மறுபடியும் வந்து அதுவாகவே கொட்டுகிறது அமுதசுரபியாக

        இதையெல்லாம் பாத்து நமக்கு ஹார்ட் அட்டாக் மட்டும் தான் வரல. ஆனா மனசு பதட்டமா இருக்கு. கொஞ்ச நேரம் மனசுக்குள்ள அதுவேதான் ஓடிட்டு இருக்கு.

       ஆனா இதையெல்லாம் மிஞ்சுறமாதிரி ஒன்னு இருக்கு. அதுதான் ஜெமினி, சாட் ஜீபிட்டி போட்டோக்கள். 

         யாரை வேண்டுமானாலும் யார் கூட வேண்டுமானாலும் இணைச்சி வச்சி போட்டோஸ் எடுத்துத் தள்ளிட்டே இருக்கலாம்‌

     இறந்த நம் வீட்டு பெரியவர்களோடு நம் குழந்தைகள் இருப்பது போன்ற புகைப்படங்களைப் பார்க்கும்போது  மகிழ்ச்சியாக தான் இருக்கிறது.

       முன்பெல்லாம் மார்பிங் ன்ற வார்த்தைக்கே அப்படியெல்லாம் செய்வார்களா என்று ஆச்சரியப்பட்டதுண்டு. 

                  ஆனால் இப்போது நடப்பதையெல்லாம் பார்க்கும்போது "என்ன கொடுமை சரவணா" என்று கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

       இது குறித்தெல்லாம் கவலை கொள்ள வேண்டுமா?

     இல்லை இதுதான் நாகரீக வளர்ச்சி என்று நாமும் அந்த ஜோதியில் இணைந்து கொள்ள வேண்டுமா?

      (யாருக்கோ, என்னவோ, எங்கோ, எதுவோ நடந்தால் நம்க்கென்ன என்று கடந்து போய் விடலாம். 

     நாமும் இந்த உலகில் தானே வாழ்கிறோம். நாளை அவர்களுக்கு நேர்ந்தது தானே நமக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறதே)

        ஆக மொத்தத்தில் ஒன்று மட்டும் நிச்சயம். இந்த போனோடும் வாழ முடியாது. இது இல்லாமலும் வாழ முடியாது. புலி வாலைப் பிடித்த கதை போல  நாமும் செல்போனின் தொடுதிரையைத் தொட்டு தொட்டு உடல்நிலையையும், மனநிலையையும் குலைத்துக் கொள்கிறோம்.

    இரு பக்கமும்

கூர் முனை உள்ள கத்தியைத் தான் நாம் கையில் பிடித்திருக்கிறோம் என்ற கவனத்தோடு இருந்தால்..........  தப்பித்துக் கொள்ளலாம். 

                         ஜெயா நவி 


          


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கரம்மா (சிறுகதை)

கண்ணம்மா

அடர்வன நாதங்கள்