சங்கரம்மா எங்க அம்மா சங்கரம்மாவும், சீனியம்மாவும் பருத்திக் காட்டுக்குள்ள பருத்தி திருடுறதுல இருந்து, கரிசக்காட்டுக்குக் களை எடுக்க போறது வரை எல்லாத்துலயும் சேக்காளிக தான். சீனியம்மா வீட்டுகாரரும், எங்க அய்யாவும் பக்கத்து பக்கத்து அச்சாவீஸ்ல வாட்ச்மேன் வேலை பாத்தாக. அந்தந்த அச்சாவீசுக்குள்ளயே தங்குறதுக்குச் சின்னதா ஒரு வீடு போட்டு கொடுத்திருந்தாக. இரண்டு அச்சாவீசுக்கு இடையில கம்பிவேலி இருக்கும். அந்த வேலில ஒரு ஆள் உள்ள நுழைஞ்சு போற அளவுக்கு இருக்குற கம்பிய வெட்டி ஓட்டை போட்டு ரெண்டு வீட்டு ஆளுகளும் அங்குட்டும் இங்குட்டும் போயிட்டு போயிட்டு வந்துகிடுவோம். சீனியம்மா காட்டு வேலைக்கு போயிட்டு வந்தா நேரா எங்க வீட்டுக்கு தான் வரும். எங்க வீட்டை ஒட்டி எங்கய்யா வச்ச வேப்பமரம் ஒன்னு நல்லா வளர்ந்து பெருசா இருக்கும். அதோட ...
விழிகள் பார்க்கும் பிம்பங்கள் எல்லாம் உனதாகவே!! செவியில் கேட்கும் ஒலியிலெல்லாம் உன்றன் குரலே !! கண்ணம்மாவிற்காக கவிபாடி பாரதி கசிந்துருகினான் !! என் கண்ணின் பாவையே ! உனக்காக நானும் உருகுகிறேன் கவிபாடி !! காணி நிலமும் தென்னை மரங்களும் தென்றல் காற்றும் குயிலின் ஓசையும் கூட வேண்டாமெனக்கு !! உன் மனதிலும் மடியிலும் ஒர் இடமும் ! தலை கோதும் உன்றன் ஒற்றைப் ஸ்பரிசமும் ! ஏய் புள்ள! என்று காதோடு பேசும் கொஞ்சல் மொழியும் ! போதுமானதுதான் நான் உயிர்பித்திருக்க !! என்னவனே !! ஜெயா நவி
அடிமனதின் நாதங்களை தட்டி எழுப்புகிறாய் அடர்வனத்தில் இருந்து ! மனம் முகிழத்தான் செய்கிறது கொஞ்சிப் பேசும் உன்றன் குரலோசையால் !! விடியும்வரை நீ பேசும் பாப்லோ நெருடாவும் கம்ப ராமாயணமும் கேட்டு சற்று வியந்துதான் போகிறேன் !! தமிழாய் தமிழின் சுவையாய் எனக்குள் இருந்து விடு எப்பொழுதும் !! தேங்கி கிடந்த நினைவுகள் எல்லாம் உன்றன் வருகையால் என் எண்ணங்களில் வரிகளாகிறது !! என் கவிவெளியெங்கும் சூழ்ந்து தனிமை அகற்று !! தமிழ் ஒளி ஏற்று !! ஜெயா நவி
கருத்துகள்
கருத்துரையிடுக