Andril paravai Nesam

 

AUDIO FILE  ; Andril paravai nesam 

________________________________


ஆயிரம் பேரிடம் அளவளாவி 

கடந்திருப்போம் !

நேரிலும் தொலைபேசியிலும் !

ஆனாலும் நெருக்கமானவர்களிடம் 

மட்டும்தான் மனம் 

குழந்தையாய் கொஞ்சும் !

தாடை தொட்டு தழுவி 

விளையாடும் !

வீண் வம்பு செய்து ரசிக்கும் !

முகம் பார்த்து பார்த்து 

உள்ளம் பூரிக்கும் 


கிள்ளை மொழி கேட்டுக் கிறங்கும் !


எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனால் 

அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் !

ஆடம் பிடிக்கும் !

ஆக்ரோஷம் கொள்ளும் !

வீம்பு பிடித்து முகம் திருப்பம் !


ஆனால் அவர்கள் நேரிலும் வந்து 

இரு கைகளால் ஏந்தி 

அள்ளி அரவணைத்துக் 

கொள்ளும்போது 

சூரியனைக் கண்ட 

பனித்துளிபோல கோபமும் 

பிடிவாதமும் எங்கோ 

ஓடி ஒளிந்து கொண்டு 

அன்றில்பறவையாய் வாழவே 

மனம் துடிதுடிக்கிறதே !!  


AUDIO FILE 

______________


 s://drive.google.com/file/d/1T-HeKU2ccLw4n0HcFneJIDdWuORcRfzo/view?usp=sharing 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கரம்மா (சிறுகதை)

கண்ணம்மா

அடர்வன நாதங்கள்